ஜூன், 16 - சனி
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 5: 33-37

“நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும், 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள்.”

அருள்மொழி :

ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.
மத்தேயு 5:37

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, பொய்யாணை இட வேண்டாம் என்கின்றார். உண்மை எதுவோ அதை 'ஆம்' என்றால் 'ஆம்', 'இல்லை' என்றால் 'இல்லை' என்று உண்மை பேசுங்கள். காரணம் விண்ணுலகு கடவுளின் அரியாசனம். மண்ணுலகு கடவுளின் கால் மனை. எனவே எதன் மீதும் ஆணையிட வேண்டாம். எருசலேம் பேரரசின் நகரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிலும் அநேகர் பொய்யாணையிடுகின்றார்கள். எனவேதான் இறைமகன், மொத்தமாக ஆணையிடுவதையே வெறுக்கின்றார். உண்மையை யாரும் மறைக்க முடியாது. நல்லதோ கெட்டதோ அவை இறைவனின் நாட்குறிப்பில் அனைவரின் அறச் செயல்களும், தீச்செயல்களும் பதிவாகியுள்ளது. எனவே ஆணையிட்டு வாழ வேண்டாம் என்கிறார் இயேசு,

சுயஆய்வு:

  1. 'ஆம்' என்றால் என்ன? உணர்கிறேனா?
  2. 'இல்லை ' என்றால் என்ன? அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உண்மைக்குச் சான்று பகர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org