ஜூன், 15 - வெள்ளி
இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:27-32

"விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்."

அருள்மொழி :

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.
மத்தேயு 5:32

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இன்றைய நற்செய்தியில், இயேசு, விபசாரம் செய்யாதே எனும் கட்டளையை விளக்கிக் கூறுகின்றார். “ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் விபசாரம் செய்தாயிற்று” என்கிறார். அவ்வாறே "ஒரு பெண்ணை இச்சையினால் நோக்குவதும் கைகளால் தொடுவதுமே பாவம்” என்கிறார். அவ்வாறே மனைவியை பரத்தைமைக்காக அன்றி வேறு எதற்காகவும் விலக்கி வைத்தல் தகாது என்கின்றார். அவ்வாறே பரத்தையின் நிமித்தம் விலக்கப்பட்டோரை மணப்பதும் விபசாரத்திற்கு துணை போகின்றனர் என்று இறைமகன், கணவன் - மனைவி உறவு எத்தகையது? அதனை எப்படிக் கடைப்பிடித்து வாழ வேண்டும்? பிள்ளைகளையும் நாம் எவ்வாறு வளர்த்தெடுக்க வேண்டும்? என்பதற்கு இவ்வரிகள் நம் அனைவருக்கும் சான்று.

சுயஆய்வு:

  1. விபசாரம் என்றால் என்ன? அறிகிறேனா?
  2. விலக்கப்பட்டோரை மணப்பதும் விபசாரம்தான். அறிகிறேனா?

இறைவேண்டல்:

உமது கணவன்-மனைவி வாழ்வின் வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாழும் வரம் தாரும். ஆமென்..


www.anbinmadal.org