ஜூன், 14 - வியாழன்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 5:20-26

“கடைசி காசு வரை திருப்பி செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள்."

அருள்மொழி :

கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.
மத்தேயு 5:26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, யார் மீதும் சினம் கொள்ள வேண்டாம். சகோதர சகோதரிகள் உடன்பிறப்புக்கள் மட்டுமன்று, நமக்கு அடுத்திருக்கும் சமயம், சாதி, இனம், மொழி கடந்து எவர் மீதும் கோபம் கொள்ள வேண்டாம். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக எனும் வாக்கை மனதில் கொண்டு அனைவரும் இறைவனில் ஒன்றே. காலப்போக்கில் மனித குலம் பிளவுபட்ட சூழலில்தான் இறைவன் மனிதரானார். நம்மிடையே குடிகொண்டு நல் ஆசானாக போதனைகளை வழங்கி, நாம் எப்படி வாழ வேண்டும்? இவ்வுலகம் நிலையற்றது. இவ்வுலக வாழ்வின் அடிப்படையில்தான் மறுவாழ்வு அமையும் என்பதன் அச்சாரமே, கடைசி காசு திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என்று போதிக்கின்றார்.

சுயஆய்வு :

  1. கடைசி காசு என்றால் என்ன?
  2. திருப்பிச் செலுத்த என் மனநிலை என்ன?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, அடுத்தவர் மீது அன்பு கொண்டு வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org