ஜூன், 12 - செவ்வாய்
இன்றைய நற்செய்தி

மத் 5: 13-16

"உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க."

அருள்மொழி :

இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
மத். 5:16

வார்த்தை வாழ்வாக

இன்றைய நற்செய்தியில், இன்றைய நற்செய்தியில், இறைமகன் உப்பாகவும் ஒளியாகவும் நம்மை வாழ அழைப்பு விடுக்கின்றார். உப்பு உணவில் சுவையைக் கூட்டுவது போலவும், ஒளியானது அனைவருக்கும் வெளிச்சத்தை தந்து இருளில் வாழாது ஒளியின் மக்களாக வாழ வேண்டும் என்பதே இறைவனின் கூற்று. “நானே உலகின் ஒளி. என்னைப் பின்செல்பவர் இருளில் வாழார்” எனும் வார்த்தைகளை மனதில் தாங்கி, அடுத்தவர் வாழ்வில் உப்பாக, ஒளியாகத் திகழ்வோம். எனவேதான் இறைமகன், “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க” என்கின்றார். நமது நற்செயல்களைக் கண்டு நமது விண்ணகத் தந்தையை எல்லா இனத்தவரும் போற்றிப் புகழ்வார்கள் எனும் உயர்ந்த சிந்தனைகளை மனதில் பதிவு செய்து அடுத்தவர்களின் வாழ்வில் ஒளியாவோம்.

சுயஆய்வு:

  1. உப்பு - ஒளி இவற்றின் மேன்மையை அறிகிறேனா?
  2. இறைமகனின் ஒளி மனிதர் முன் ஒளிர்ந்திட எனது முயற்சி யாது?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, உப்பாகவும் ஒளியாகவும் திகழ்ந்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org