ஜூன், 10 - ஞாயிறு
இன்றைய நற்செய்தி:

மாற்கு 3:20-35

“கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும், சகோதரியும், தாயுமாவார்.”

அருள்மொழி :

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.
மாற்கு 3:35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவை நாடி மக்கள் கூட்டம் சேரவே உணவு அருந்தக்கூட நேரம் இல்லாமல் போதனையிலிருந்தார். மறைநூல் அறிஞர், இயேசுவின் செயல்களைக் கண்டு. “இவரைப் பேய் பிடித்திருக்கின்றது. பெயல் செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார்” என்று பேசிக் கொண்டதை இயேசு கண்டித்தார். மேலும் இயேசுவின் உண்மையான உறவினர்கள் யார் என்பதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார். மரியா தேவ கட்டளைகளைக் கடைப்பிடித்து கடவுளின் திருவுளப்படி வாழ்கின்றவர். இவரைப் பற்றிச் சரியாக அறியாத இவர்கள், "உன் தாயும், சகோதர, சகோதரிகளும் வெளியில் காத்திருக்கின்றார்கள்” என்றதும், இயேசு, “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களே என்னுடைய சகோதர சகோதரியும் தாயும் ஆவார்கள்” என்றார். ஆம், இறைத்திட்டத்தை இன்று வரை விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசியான மரியா நிறைவு செய்கின்றார்.

சுயஆய்வு :

  1. கடவுளின் திருவுளத்தை அறிகிறேனா?
  2. நிறைவேற்ற எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, அன்பு இயேசுவே, மரியின் பாதையில் நான் பயணிக்கும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org