ஜூன், 9 - சனி
தூய மரியன்னையின் திருஇருதயம் பெருவிழா

இன்றைய நற்செய்தி:
லூக்கா 2: 41-51

“அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.”

அருள்மொழி:

பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
லூக்கா 2:51

வார்த்தை வாழ்வாக:

இன்று நாம் இயேசுவின் தாய் மரியன்னையின் திருஇருதயப் பெருவிழாவை நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். அன்னையின் திருஇருதயம் பிறருக்காகத் துடிக்கின்ற தாய்மையும், தூய்மையும் நிறைந்தது. கபிரியேலின் மங்கள செய்தி, எலிசபெத்தம்மாளின் “ஆண்டவரின் தாய் என்னிடம் வர பேறு பெற்றது எப்படி?”, எருசலேமில் சிறுவன் இயேசு, “என்னை ஏன் தேடுகிறீர்கள்? என் தந்தையின் அலுவலை நான் கவனிக்க வேண்டாமா?”, காணிக்கையன்னையாக எருசலேம் தேவாலயத்தில் சிமியோன் கூறியது, “உன் இதயத்தை ஓர் வாள் ஊடுருவும். இக்குழந்தை பலரது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் வித்தாக அமையும்.” சிலுவையடியில் யோவானை மகனாக அளித்து இவ்வுலக மாந்தர் அனைவருக்கும் தாயாக்கிய மகனின் வாரிசுகள் யாவரையும், மாசற்ற மரியின் திருஇருதயம் தாங்கி நின்று, தன்னை நாடி வருவோரை இறைவன்பால் கொண்டு செல்லும் திருஇருதயமாகும்.

சுயஆய்வு:

  1. மாமரியின் இதயத்தின் இரக்கத்தை அறிகிறேனா?
  2. எனக்கடுத்திருப்போரின் இதயத் துடிப்பை உணர்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது தாய்மையின் வழியில் பணியாற்றும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org