அன்பின்மடல்

ஜூன், 7- வியாழன்
இன்றைய நற்செய்தி:

மாற்கு 12 : 28-34

“நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை.”

அருள்மொழி :

அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
மாற்கு 12:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவிடம் மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் உரையாடலைக் கண்டு, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது போதகரே?” என்றனர். “இஸ்ராயலே கேள், உன் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே. அவரை முழுமையாக வணங்குவாயாக. உன்னை அன்பு செய்வது போல் உனக்கடுத்திருப்பவரையும் அன்பு செய்வாயாக. இது இரண்டாவது கட்டளை" என்றார். இதைவிட மேலானது ஒன்றுமில்லை . ஒரே கடவுள். பகைவரையும் அன்பு செய்வது. அதற்கு மறைநூல் அறிஞர், “கடவுளை ஆராதிப்பதும் அடுத்தவர் மீது அன்பு செய்வதும் எரிபலியைவிட மேலானது” என்று கூறியதைக் கண்ட இறைமகன், அவர் அறிவுத் திறனோடு பேசியதைக் கண்டு, “நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை” என்று அவர்களுடைய மனமாற்றத்தைக் கண்டு பாராட்டினார்.

சுயஆய்வு :

  1. கடவுள் ஒருவரே, அவரை ஆராதிக்கின்றேனா?
  2. என்னை அன்பு செய்வது போல அடுத்திருப்பவரை அன்பு செய்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, சாதி, சமயம், இனம், மொழி கடந்து அன்பு செலுத்தும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org