இன்றைய நற்செய்தி:

மாற்கு 12: 18-27

"அவர் இறந்தோரின் கடவுளல்ல, மாறாக வாழ்வோரின் கடவுள்."

அருள்மொழி :

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று கூறினார்.
மாற்கு 12: 27

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், சதுசேயர், உயிர்த்தெழுதல் இல்லை என்ற கொள்கையோடு வாழ்கின்றவர்கள். எனவே தான் மோசே கட்டளையின் தாக்கத்தைத் தவறாகப் புரிந்து இங்கே வாதாடுகின்றார். அதற்கு இறைமகன், “இவ்வுலக வாழ்வில் எத்தனைத் தாரங்களைக் கொண்டிருந்தாலும், மறுவுலக வாழ்வில் அங்கே உறவுகள் இல்லை. அங்கே அனைவரும் இறைவனில் ஒன்றே. அங்கே பெண் கொடுப்பதும் இல்லை, வாங்குவதும் இல்லை. நிலைவாழ்வு மட்டுமே. இவ்வுலக வாழ்வில் வாழ்கின்ற வாழ்க்கையின் அடிப்படையில்தான் மறுவுலக வாழ்வு அமைகின்றது. இங்கு எந்த அளவையால் அளந்தாயோ அதே அளவை நிலை, நிறைவாழ்வில் அளக்கப்படும்.” எனவே நிலைவாழ்வின் அடித்தளம் இவ்வுலக வாழ்வே! அதற்குத் தேவை தேவ கட்டளைகள்.

சுயஆய்வு:

  1. வாழ்வோரின் கடவுளை அறிகிறேனா?
  2. அதனைக் காண என் இவ்வுலக முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, நான் வாழும் இவ்வுலகில் உமது கட்டளைப்படி வாழ்ந்து உம் பாதம் சேரும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org