இன்றைய நற்செய்தி:

யோவான் 15 : 18-21

" “நீங்கள் என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்.”

அருள்மொழி:

பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்!.
யோவான் 15:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, “உலகு உங்களை வெறுக்கின்றது. ஆனால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது" என்பதை நாம் உணர்ந்திடுவோம். காரணம், நாம் உலகைச் சார்ந்தவர்களல்ல, திருமுழுக்கின் வாயிலாக நாம் அவரது மறையுடலாக இருக்கின்றோம். இறைமகன் நம்மைத் தேர்ந்து கொண்டார். எனவேதான் சுயநலவாதிகள், அதிகார வர்க்கம் நம்மை வெறுப்பதை இன்றும் நாம் காண்கின்றோம். எனவே, இறைமகன், சாதிக்கு சமாரியா பெண் - சமயத்திற்கு கானானேயப் பெண் போன்று, அவர்களிடம் கடந்து சென்று, எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்பதற்குச் சான்றாக வாழ்ந்து காட்டினார். இதுவே இறைவார்த்தை. இதனைக் கடைப்பிடித்து வாழும்போது, நமது வார்த்தைகளும் மண்ணுலகில் நிலைக்கும்.

சுயஆய்வு:

  1. இறைவார்த்தையின் கருப்பொருளை அறிகிறேனா?
  2. அதன்படி வாழ என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது வார்த்தை என் வாழ்வின் நங்கூரமாகிடும் வரம் தாரும். ஆமென்..


www.anbinmadal.org