ஜூன், 3 - ஞாயிறு
இன்றைய நற்செய்தி

மாற்கு 14: 12-16, 22-26

""கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா “இறையாட்சி வரும். அப்போதுதான் திராட்சை ரசத்தைக் குடிப்பேன்."."

அருள்மொழி :

திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்" என்றார்..
மாற்கு 14:25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழாவை திருஅவை கொண்டாடி மகிழ்கின்றது. “பாஸ்கா விருந்திற்கு எந்த இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்ற சீடர்களின் கேள்விக்கு, இறைமகன், “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். அங்கே மண் குடத்தில் தண்ணீர் சுமந்து வரும் ஆள் பின்னே சென்று, அவர் எந்த வீட்டிற்குள் செல்கிறாரோ அந்த வீட்டிற்குள் செல்லுங்கள். உரிமையாளிடம், நான் பாஸ்கா விருந்துண்ண ஏற்பாடு செய்துள்ள அறை எங்கே என்று போதகர் கேட்கச் சொன்னதாகச் சொல்லுங்கள். மேல் மாடியில் ஓர் பெரிய அறை அவர் காட்டுவார். இறைமகனின் திருஉடல், திருஇரத்தம் தம் சீடர்களுக்குப் பகிர்ந்து கொடுக்க முன் குறித்து வைத்துத் தயாராக உள்ள அறையில் இறைமகன் தன் பாஸ்கா திருவிருந்தை வழங்கி, திரு அவைக்குத் தேவையான ஆன்மீக உணவை இங்கே பகிர்ந்தளித்தார்.” உலகம் முடியும் வரை இந்த பாஸ்கா உணவு தொடரும் மறையுண்மையாகும். எப்போது இறையாட்சி மலர்கின்றதோ அன்றே இறைமகன் மானிட மீட்பின் திராட்சை இரசத்தைப் பருகுவார்.

சுயஆய்வு :

  1. பாஸ்கா விருந்து மேன்மை உணர்கிறேனா?
  2. அதனைப் பெற்றுக்கொள்ள என் தகுதி யாது?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, உமது வழியாக நான் பயணிக்கும் வரம் தாரும். ஆமென்.

www.anbinmadal.org