ஜூன், 2 - சனி
இன்றைய நற்செய்தி

மாற்கு 11:27-33

“திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணுலகிலிருந்து வந்ததா? மண்ணுலகிலிருந்து வந்ததா?”

அருள்மொழி :

திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்" என்றார்.
மாற்கு 11:30

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவை நோக்கித் தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும், “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கின்றீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?” என்று கேட்டனர். மறுமொழியாக இயேசு, “நானும் உங்களிடம் ஓர் கேள்வி கேட்கின்றேன். திருமுழுக்கு யோவானுக்கு திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் விண்ணுலகிலிருந்து வந்ததா? மண்ணுலகிலிருந்து வந்ததா?” என்று கேட்டார். இக்கேள்வி அவர்களை நிலைகுலையச் செய்தது. காரணம், இந்த அதிகாரம் விண்ணுலகிலிருந்துதான் வந்தது. இறைமகனுக்கு முன்னோடியாக வானதூதரிடம் மங்கள் செய்தியை சக்கரியா பெற்று, இறைமகனுக்கு முன்பாக பிளவுபட்ட மனுக்குலத்தை சமன்படுத்தவே யோவான் அனுப்பப்படுகின்றார். இந்த உண்மையை மறைக்க முடியாமல் திகைத்துப் போயினர்.

சுயஆய்வு :

  1. திருமுழுக்கு வழங்கும் அதிகாரத்தை உணர்கிறேனா?
  2. அவரது வருகையின் பொருள் அறிகிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, பிளவுபட்ட மனுக்குலத்தை சமத்துவத்தின் பெயரால் ஒன்றிணைக்கும் வரம் தாரும். ஆமென்.

www.anbinmadal.org