ஜூன், 1- வெள்ளி
இன்றைய நற்செய்தி

மாற்கு 11: 11-26

"நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எதைக் கேட்க விரும்பினீர்களோ அவற்றைப் பெற்றுக் கொள்வேன் எனும் நம்பிக்கை வேண்டும்."

அருள்மொழி :

ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்
மாற்கு 11:24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, பட்டுப்போன அத்தி மரத்தைப் பற்றி, நல் ஆசானாக நமக்கு உணர்த்துகிறார். நாம் நமது வாழ்வில் சந்தோஷமாக அனைத்து வசதிகளைக் கொண்டு வாழும்போது, நமக்கு அடுத்திருப்பவர்கள் துன்பத்தில் நாம் பங்கு கொண்டு உதவி புரிய வேண்டும் என்பதே கட்டளை. ஆனால் சுயநலவாதிகள், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற நிலையில், எந்தப் பிரதிபலனையும் அவர்களிடமிருந்து காணமுடியாது என்பது போல்தான், அத்தி மரம் தான் மட்டும் தழைத்திருந்தது. இறைமகன் தேடிய கனி அங்கு இல்லை. தான் மட்டும் வாழ்ந்து அடுத்தவருக்கு உதவ முடியாத நிலையைக் கண்டு இயேசு சபிக்கின்றார். இவ்வாறே சுயநலவாதிகள் இருப்பாரெனில் நிலைவாழ்வை அடைய முடியாது, நரக நெருப்பில் கருகிப் போவார்கள் என்பதற்குச் சான்றாக அமைகின்றது.

சுயஆய்வு :

  1. நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்றுள்ளேனா?
  2. பகிர்ந்து வாழும் மனம் கொண்டுள்ளேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, தனக்குள்ளதைப் பகிர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

www.anbinmadal.org