அருள்வாக்கு இன்று
மே 25-புதன்
இன்றைய நற்செய்தி
யோவான் 16:12-15
இன்றைய புனிதர்

பாத்சி நகர் புனித மகதலா மரியா
யோவான் 16:12-15
பாத்சி நகர் புனித மகதலா மரியா
தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவே தான் அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.யோவான் 16:15
இன்றைய நற்செய்தியில் இயேசு மூவொரு இறைவன் எவ்வாறு செயல்படுகின்றார். தந்தையின் விருப்பம் மகனில் நிறைவேறியது. மகனின் பணித் தூய ஆவியாரில் நிறைவு பெறும் என்பதை விளக்குகின்றார். எனவே மூவரும் ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே தன்மைக் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதை இங்கே காணமுடிகின்றது. அன்பார்ந்தவர்களே! நாம் இவ்வார்த்தையின் முழு வல்லமைகளை உணர்ந்துத் தாமும் பெற்று மற்றவர்களையும் அன்பு செய்து வாழவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்பதை உணருவோம்.
அன்பு இயேசுவே! என்றும் உமது பாதைகளைப் பற்றிக் கொண்டு வாழும் வரம் தாரும். ஆமென்.