இன்றைய நற்செய்தி:

மாற்கு 10:1-12

“இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி இவர்கள் இருவர் அல்ல, ஒரே உடல்."

அருள்மொழி:

இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.
மாற்கு 10:8

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, மணவிலக்கு பற்றி இயேசுவைப் பரிசோதிக்கும் வண்ணம் பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டனர். இயேசு, “பத்து கட்டளைகள் என்ன கூறுகின்றது?” என்று கேட்க, “மோசே மணவிலக்கு சான்றிதழ் கொடுத்து விலக்கி விடலாம்” என்றனர். இறைமகன் இயேசு, “படைப்பின் தொடக்கத்தில் இறைவன் ஆணும் பெண்ணுமாகத்தான் படைத்தார். இனி இவர்கள் இருவரல்ல, ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும். இணைந்தே இருக்கட்டும்” என்பதே இறைத்திட்டம். இக்காலச் சூழலில் எங்கு பார்த்தாலும் மணமுறிவுகள் பெருகி வரும் வேளையில், நாம் கடவுள் இணைத்த இம்மாபெரும் அருளடையாளத்தை அருள் பொக்கிஷமாகக் கருதி, ஒருவரை ஒருவர் அன்பு செய்து, இறை-மனித உறவில் சங்கமித்து வாழ்ந்து, பிள்ளைகளை இறையருளில் வளர்த்தெடுப்போம்.

சுயஆய்வு :

  1. கடவுள் இணைத்ததை நான் உணர்ந்து வாழ்கிறேனா?
  2. ஒரே உடல் எனும் இறைவாக்கை அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது இறைவார்த்தையின்படி ஒரே மனம் கொண்டு வாழும் வரம் தாரும். ஆமென்.