இன்றைய நற்செய்தி:

மாற்கு 9:41-50

“நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.”

அருள்மொழி:

உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.
மாற்கு 9:50

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, “இறைமகன் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பவர்கள் எவரையாவது பாவம் செய்வதற்கு உடந்தையாக்கினால், அவர்கள் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவதே சரி” என்கிறார். “நமது உடலுறுப்புகள் ஏதாவது ஒன்று பாவம் செய்தால் அதனை வெட்டுவதே நலம்” என்று நல் ஆசானாக நமக்கு அறிவுறுத்துகிறார். “நாம் அடுத்தவருக்குத் தீங்கு செய்வதை மறந்து விடுங்கள். அனைவரும் இறைவனில் ஒன்றே. உப்பின் தன்மையைக் கொண்டிருங்கள். உப்பு உணவில் அளவோடு கலந்தால்தான் அது ருசிக்கும். அதே வேளையில் உப்பு உவப்பற்றுப் போனால் எந்தப் பயனும் இல்லை. எனவே உப்பின் தன்மையைக் கொண்டிருங்கள். ஒருவர் மற்றவரோடு அன்பு கொண்டு வாழுங்கள். வேற்றுமை பாராமல் வளைந்து கொடுத்து வாழுங்கள். ஆதியில் நுழைந்த சாத்தான் இன்று வரை உலகை வலம் வருகிறது என்பதை உணர்ந்து, இறைவாக்கின்படி வாழுங்கள்” என்கிறார் இயேசு.

சுயஆய்வு :

  1. பிறர் பாவம் செய்வதற்கு உடந்தையாய் இருந்திருக்கிறேனா?
  2. இறைவாக்கின்படி வாழ என்னைத் தயார்படுத்தியுள்ளேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, நான் அனைத்து நிலையினரோடும் உப்பின் தன்மை கொண்டு வாழும் வரம் தாரும். ஆமென்.

.