இன்றைய நற்செய்தி:

மாற்கு 9:38-40

“ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்."

அருள்மொழி:

ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
மாற்கு 9:40

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் பெயரால் ஒருவர் பேய் ஓட்டுகின்றார். இதனைக் கவனித்த சீடர்கள், “போதகரே, உம் பெயரால் ஒருவர் பேய் ஓட்டுகின்றார். ஆனால் அவர் நம்மைச் சாராதவர்” என்று. அன்றே சீடர்களுக்கு மத்தியில் பிளவு இருப்பதை நாம் உணர முடிகின்றது. அதே வேளையில் இறைமகன், “நாங்கள் தடுக்கப் பார்த்தோம்” என்று கூறிய சீடர்களை நோக்கி, “தடுக்க வேண்டாம். என் பெயரால் வல்லச் செயல் புரிபவர், நமக்கு எதிராக இராதவர். நம் சார்பாக இருக்கின்றார்” என்று இறைமகன், எது அறச்செயல், எது தீச்செயல் என்பதை இங்கே விளக்குகின்றார். தீச் செயல் புரிபவர்கள் சாத்தானின் சார்பாக வேலை செய்கின்றனர். ஆனால் வல்லச் செயல்கள் செய்பவர் இயேசுவின் சார்பாக உள்ளார்கள் என்பதை மனுமகன் சுட்டிக் காட்டுகின்றார்.

சுயஆய்வு :

  1. வல்லச் செயல்களை அறிகிறேனா?
  2. இயேசுவின் பெயரால் அறச் செயல்கள் நடக்கின்றன. அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது ஆற்றலைக் கொண்டு வல்லச் செயல்களை நான் செய்யும் வரம் தாரும். ஆமென்.