இன்றைய நற்செய்தி

யோவான் 17: 1-11

"உம்முடையதெல்லாம் என்னுடையதே, என்னுடையதெல்லாம் உம்முடையதே.”

அருள்மொழி :

"என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய் நான் மாட்சி பெற்றிருக்கிறேன்..
யோவான் 17:11

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், உயிர்த்த இயேசு, இறைவனிடம் வேண்டல் செய்கின்றார். “தந்தையே, என் நேரம் வந்து விட்டது. உம் மகன் வழியாக உம்மை மாட்சிமைப் படுத்தினீர். மகனிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் நிலைவாழ்வை அருளுமாறு உம் மக்கள் அனைவர் மீதும் அதிகாரம் அளித்தீர். அதன்படி அனைத்து வேலையையும் செய்து முடித்து உம்மை மாட்சிமைப் படுத்தினேன்.” ஆனால் தந்தை உலகம் தோன்றும் முன்பே, “உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகைமை உண்டாக்குவோம்” என்று முன்குறித்து என்னைத் தகுந்த நேரத்தில் மரியின் மகனாகப் பிறக்கச் செய்து, என் வழியாக உமது மக்களை அழிவினின்று மீட்டு, என்னையும் மாட்சிப்படுத்தினீர். உமது மக்களுக்குத் தந்தையின் மாட்சியை இறைமகனின் வாயிலாக இவ்வுலகு அறிந்து கொண்டது. எனவேதான் கிறிஸ்துவ மதம் தழைத்தோங்கி நம்மை மலரச் செய்கின்றது.

சுயஆய்வு:

  1. தந்தையுடையது மகனுடையது. அறிகிறேனா?
  2. மகனுடையதெல்லாம் என்னுடையதே. உணர்கின்றேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, உயிர்ப்பின் மேன்மையை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.