இன்றைய நற்செய்தி

யோவான் 16:23-28

“நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். மீண்டும் தந்தையிடம் செல்கிறேன்."

அருள்மொழி :

"நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்."
- யோவான் 16:28

வார்த்தை வாழ்வாக

இன்றைய நற்செய்தியில், இயேசு உலகின் மீது வெற்றிக் கொண்டார். ஆதி பெற்றோரின் வழித் தோன்றியப் பாவம், உலகைப் பலவிதமான தீச்செயல்களுக்கு உட்படுத்தி, மனுக்குலத்தைச் சாதி, சமயம், இனம், மொழி என்ற தாழ்வு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கி, நிலைகுலைந்த மனுக்குலத்தை முன்னுரைத்த இறைவனின் வாக்கின்படி மரியின் வித்தாக மண்ணுலகில் வார்த்தை மனுவுருவாகி நம்மிடையே குடிகொண்டு தீயோனிடமிருந்து மனுக்குலத்தை மீட்டெடுக்கப் பல்லாயிரம் துயர்களை அனுபவித்து, நீதியை, உண்மையை நிலைநாட்டி, தன் பிறப்பு முதல் உயிர்ப்பு வரை இறைமகன் சந்தித்த சவால்களின் வெளிப்பாடே மீண்டும் தந்தையிடம் வெற்றி வேந்தனாகச் செல்கின்றார். மீண்டும் வருவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது.

சுயஆய்வு:

  1. தந்தை-மகன் உறவை அறிகிறேனா?
  2. இறைமகனின் வெளிப்பாடான வாக்கை அறிகிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, உமது இரண்டாம் வருகையின்போது உமது வலப்பக்கம் அமரும் வரம் தாரும். ஆமென்,