= arulvakku-11

இன்றைய நற்செய்தி

யோவான் 16:20-23

"என் பெயரால் தந்தையிடம் நீர் கேட்பதால் அவர் உங்களுக்குத் தருவார்.”

அருள்மொழி :

அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
யோவான் 16:23

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் வேதனையுறுவதை அவள் மட்டுமே உய்த்துணர முடியும். அவ்வாறே இறைமகனை நாம் மீண்டும் காணும்போது, நாம் இவ்வுலகில் பட்ட துயரங்களெல்லாம் மகிழ்ச்சியாக மாறும். அந்த மகிழ்வான நிலைவாழ்வை நாம் அடைவதற்கு இவ்வுலக வாழ்க்கையே சான்றாகும். நாம் இவ்வுலகில் வாழும்போது நமது செயல்பாடுகள் எப்படி அமைகின்றதோ, அவ்வாறே நமது மறுவுலக வாழ்வும் அமையும் என்பதற்கு இறைமகன் விட்டுச் சென்ற போதனைகள் நமது அடித்தளம் என்பதை மனதில் கொண்டு, இறைமகனின் பெயரால் நாம் பெற்ற அறச் செயல்களின்படி வாழ்ந்து நாம் தந்தையிடம் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வோம். தந்தையும் நமக்கு மிகுந்த கைம்மாறு தருவார்.

சுயஆய்வு :

  1. இவ்வுலக வாழ்வின் தாக்கம் என்ன? அறிகிறேனா?
  2. மறுவுலக வாழ்வின் மாட்சி என்ன? அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! எனது அறச்செயல்களை மிகைப்படுத்தி வாழும் வரம் தாரும். ஆமென்.