இன்றைய நற்செய்தி:

யோவான் 16: 16-20

"நீங்கள் துயருறுவீர்கள், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.”

அருள்மொழி :

நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.
யோவான் 12:47

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், உயிர்த்த இயேசு, “நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள். அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள், ஆனால் அது மகிழ்ச்சியாக மாறும். ஏனெனில் உங்களைத் தேர்ந்து, நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைப் புதுமைகளினாலும், அறச் செயல்களினாலும், இறைவாக்கினாலும் போதித்தவர் உங்களோடிருந்தார். அவரின் மாட்சியை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் உங்களை விட்டு தந்தையிடம் சென்று தனது துணையாளரை உங்களிடம் அனுப்புவார். அப்போது நீங்கள் உண்மையின் ஆவியாரை அறிந்து, புரிந்து, அவரில் மகிழ்ச்சியோடு வாழ்வீர்கள்.” அப்போது நமது துன்பங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாக மாறும் என்று நல் ஆசானாக நமக்குப் பதிவு செய்கின்றார். இறைவனில் ஒன்றித்து வாழ்வதே இறை - மனித உறவு ஆகும்.

சுயஆய்வு :

  1. நான் துயருறுவது எப்போது?
  2. எனது துயரம் எப்போது மகிழ்ச்சியாக மாறும்? உணர்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது விண்ணகப் பயணம் என் நிலைவாழ்வின் அடித்தளமாகிடும் வரம் தாரும். ஆமென்.