இன்றைய நற்செய்தி:

யோவான் 16 : 12-15

“தந்தையுடையவை யாவும் என்னுடையவையே.”

அருள்மொழி:

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.
யோவான் 10:27

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, தம் சீடர்களிடம், நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை பல உண்டு. ஆனால் இப்போது உங்களால் தாங்க இயலாது. எனவே ஒருசிலவற்றைத் தம் சீடர்கள் வாயிலாக நமக்கும் வெளிப்படுத்துகின்றார். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார், நம்மிடம் வரும்போது உண்மையை நோக்கி வழிநடத்துவார். அதற்கான ஆயத்தம் நம்மில் வேண்டும். நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு வெளிப்படுத்தினேன். தூய ஆவியாரோ என்னிடமிருந்து பெற்று உங்களை வழிநடத்துவார் எனும் வாக்கு மானிடராகிய நாம் அனைவரும் ஒரே இறை-மனித உறவில் சங்கமித்து நிலைவாழ்வை அடைய நாம் வாழும் தலமே - மண்ணகமே அடித்தளம். இங்கு சமத்துவ வாழ்வு வாழும்போது மறுவாழ்வில் நிலைவாழ்வு பெறுவோம், உண்மையை நோக்கிய பாதையில் பயணிப்போம்.

சுயஆய்வு:

  1. தந்தை-மகன்-தூய ஆவி மூவொரு இறைவனை அறிகிறேனா?
  2. மூவரும் ஒரே கடவுள் பணிகள் இவற்றை அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உண்மையை நோக்கிய தூய ஆவியாரில் நான் இணைந்திடும் வரம் தாரும். ஆமென்.