இன்றைய நற்செய்தி:

யோவான் 15:9-17

" "நீங்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடித்து என் அன்பில் நிலைத்திருங்கள்."

அருள்மொழி :

என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.
யோவான் 15:9

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, “என் தந்தை என் மீது அன்பு செய்துள்ளது போல், நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் என்றென்றும் நிலைத்திருங்கள்” என்று அன்புக் கட்டளையிடுகின்றார். அன்பர்களே! அவரது அன்பு ஆழம், அகலம், எல்லை காணா கருணையின் அன்பு. இன்று வரை உலகில் அநேக தீச்செயல்கள், சண்டைகள், சாதிக் கலவரம், சமயக் கலவரம் தோன்றி, மக்களை நிலைகுலையச் செய்யும் சூழலிலும், இறைமகன் நம்மோடு உரையாடுகின்றார். அவர் கொடுத்த கட்டளை இரண்டு. 0 ஒரே கடவுள். இதன் ஆழத்தை உணர முடியாதோர் சமயச் சண்டைகளை உருவாக்குகின்றனர். (2) அன்பு செய்தல். இதன் சாராம்சத்தை ரசித்து, ருசித்து, இறை - மனித உறவில் சங்கமிக்கும்போது, இறைமகனின் அன்பில் நிலைத்திருப்போம்.

சுயஆய்வு:

  1. கட்டளைகளை அறிகின்றேனா?
  2. அதன்படி வாழ என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது கட்டளை எனது வாழ்வின் அடித்தளமாகிடும் வரம் தாரும். ஆமென்.