இன்றைய நற்செய்தி

யோவான் 15 :12-17

"வாழ்வு தரும் உணவு நானே."

அருள்மொழி :

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
யோவான் 15:16

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், “நான் உங்கள் மீது அன்பு கொண்டிருப்பது போல், நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருங்கள். இதுவே என் கட்டளை.” அன்பு என்பது இறைமகன், மானிடரிடம் ஏழை, எளியோரைத் தேடித் தேடி அவர்களின் துயரைத் துடைத்தார். எந்தக் கோயிலுக்குள்ளும் அவர் அமர்ந்திருக்கவில்லை. தந்தையின் கட்டளையை நிறைவு செய்யவே மண்ணுலகம் வந்தார். படைப்பின் சிகரமாகிய மானிடரை ஒன்றிணைக்கவே வந்தார். சாதி, சமயம், இனம், மொழி இவற்றின் பொருட்டு பிளவுபட்டிருந்தவர்களை நாடிச் சென்று உதவி செய்தார். அதே அன்பைத் தம் சீடருக்கும், நமக்கும் அன்புக் கட்டளையாகக் கொடுக்கின்றார். “நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்” என்று நம் ஒவ்வொருவரையும் பார்த்து அன்புக் கட்டளையிடுகின்றார். அதன்படி வாழ்வோம்.

சுயஆய்வு :

  1. நான்தான் தேர்ந்து கொண்டேன் என்பவரை அறிகிறேனா?
  2. அவரது கட்டளையின்படி நடக்கின்றேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, உமது அழைப்பை ஏற்று, அதன்படி வாழ வரம் தாரும். ஆமென்.