அருள்வாக்கு இன்று
ஏப்ரல் - 24
இன்றைய நற்செய்தி
யோவான். 6:60-69
இன்றைய புனிதர்

புனித பிதேலிஸ்
யோவான். 6:60-69
புனித பிதேலிஸ்
'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.”
இன்றைய நற்செய்தியில் இயேசு தூய வாழ்வு வாழ அருள்பவர் தூய ஆவி என்பதை உணர்த்துகின்றார். சரீர அளவிலான உறவுகள் ஒன்றுக்கும் உதவாது. அழிவுக்குரியது. ஆத்மப் பூர்வமான ஆவியாரின் கொடைகள் இறைவாழ்வைத் தருபவை என்பதை எடுத்துரைக்கின்றார். எனவே திருமுழுக்கின்போது பெற்றுக் கொண்ட தூயு ஆவியாரைச் சுயநலம், பேராசைப் போன்ற தீயச் செயல்களினால் இழந்து விடாமல் வாழ்வு தரும் ஆவியானவரை நாம் பெற அதற்கான அறச்செயல்களைச் செய்வோம். நாமும் வாழ்ந்து அடுத்தவரையும் இறையாட்சிக்கு அழைத்துச் செல்வோம்.
அன்பு இயேசுவே! தூய ஆவியானவரை எனக்குள் காண என் செயல்களை வலுப்படுத்தி எனக்கு வரம் தாரும். .ஆமென்.