அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 20

இன்றைய நற்செய்தி

யோவான் 6:30-35

இன்றைய புனிதர்

புனித மார்சலின்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது: என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது". யோவான் 6:35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு நற்கருணையை நமது ஆன்மீக உணவாக இந்த உலகை விட்டப் பிரியும் நேரத்தில் ஏற்படுத்திச் சென்றார். நான் எந்நாளும் உங்களோடிருக்கினறேன். எனது உணவைத் தகுந்த ஆயத்த்தோடு உண்பவனுக்கு என்றுமே பசி இராது என்று கூறுகின்றார். உடல்பசி வேறு. ஆன்மீகப் பசி வேறு. உடல்பசிக்குத் தேவையான உணவை முறையோடு பிறரைத் துன்புறுத்தாமல் ஏமாற்றாமல் நாம் அதனைப் பெறும் போது உடல்பசியைப் போக்கி, அதுவே ஆன்ம உணவாக மாறும். இதனை உணர்ந்துக் கொள்ளுதல் அவசியம். தான் மட்டும் உண்டால் வாழ்ந்தால் போதும் என்ற சுயநலம் கருதாமல் பொதுநலம் காணும்போது நாம் மேன்மையடைவோம்.

சுய ஆய்வு

  1. நான் எனக்காக மட்டும் வாழ்கின்றேனா?
  2. பிறர் பசிபோக்க என் முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! வல்லவரே! நல்லவரே! பிறர் வாழ என் உள்ளத்தை நீர் தொடும் இயேசுவே... .ஆமென்.

அன்பின்மடல் முகப்பு