அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 19

இன்றைய நற்செய்தி

யோவான் 6:22-29

இன்றைய புனிதர்

 St. Nemesius

புனித நெமசியஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்றச் செயல்;” என்றார். யோவான் 6:29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இன்று மக்கள் கூட்டம் இறைவார்த்தையை விட்டு வயிரார உண்டதால் தான் அவரைப் பின்பற்றுகிறார்கள் என்று அவர்களது மனநிலையைச் சோதிக்கவே இந்தக் கேள்வியைத் தொடுக்கின்றார் இயேசு. அப்போது மக்கள் 'நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்” என்று கேட்டனர். கடவுள் அனுப்பியவரின் செயல்களை இறைதிட்டமாக ஏற்றுச் செயல் படுவதே என்று பதிளிக்கின்றார் இயேசு. ஆம் அன்பர்களே! நாம் இறைமகன் கொடுப்பார் என்று நம்புவதை விட அவரது வல்லச் செயல்களை நமது வாழ்வில் கடைபிடித்து இறையாட்சி இந்த மண்ணில் மலர்ந்திடக் கருபொருளாவோம்.

சுய ஆய்வு

  1. வல்லச் செயல்கள் என்ன என்பதை உணர்கின்றேனா?
  2. அதனை எனது வாழ்வில் கடைபிடிக்க எனது முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் என்றும் உமது மதிப்பீடுகளின்படி வாழ வரம் தாரும். .ஆமென்.

அன்பின்மடல் முகப்பு