அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 18

இன்றைய நற்செய்தி

லூக்கா 24:35-48

இன்றைய புனிதர்

St.Wunibald OSB

புனித வினிபால்ட்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். லூக்கா 24:43

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் உயிர்த்த இயேசு, தன் சீடர்களுக்குத் தோன்றித் தான் யார் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார்கள். அவர்களிடம் உண்பதற்கு எதாவது உண்டா? என்று கேட்டு அவர்கள் கொடுத்த மீனை உண்கின்றார். ஆம் நண்பர்கவே! நாமும் நமக்கு அடுத்தது இருப்பவர்களுக்குப் பசியைப் போக்கும்போது அவர் ஏழை எளியவர்கள் வழியாக நம்மோடு உறவாடுகின்றார். அவர்களுக்கு நாம் கொடுக்கும் உணவு அவருக்கே கொடுப்பதாகும். எனவே இறைமகன் சீடரிடம் கேட்டு வாங்கி உண்கின்றார். இதனை நாமும் வாழ்வில் கடைபிடிப்போம். கடந்து செல்வோம். வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் வறியோருக்கு உதவுவோம்.

சுய ஆய்வு

  1. இயேசுவின் செயல் என்னில் உருவாக்கிய நிகழ்வு யாது?
  2. நான் எனக்குள்ளதை வறியோர்களோடு பகிர்ந்துக் கொள்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர் உமது சீடர்களிடம் கேட்டு வாங்கிய செயல் என்னில் மாற்றம் காண வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு