அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 17

இன்றைய நற்செய்தி

யோவான் 6:16-21

இன்றைய புனிதர்

St. Stephen Harding

புனித ஸ்டிபன் ஆர்டிங்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவர் களிடம், "நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார் .யோவான் 6:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களை நோக்கி அஞ்சாதீர்கள் என்கிறார். இயேசு கடல் மீது நடந்து வருவதைக் கண்டு என்னாவோ ஏதோ தீய ஆவியோ என்று எண்ணிப் பயப்படுகின்றார்கள். அவர்களின் விசுவாமின்மையைக் கண்ட இயேசு அவர்களை நோக்கி அஞ்சாதீர்கள் "நான் தான்" என்கிறார். அன்புச் சகோதரர்களே இயேசுவின் வார்த்தைகள் நமக்குள்ளும் நாம் அவருள்ளும் சங்கமிக்கும் போது ஏன் பயம். சீடர்கள் முழுமையாக இறைமகனை அறியாமையாலும் உணராமலும் இருந்தமையால் அஞசினார்கள். எனவே நாமும் இயேசுவை நமக்குள் பதிவு செய்ய நாம் நமது நிலைகளை விட்டுக் கீழ் இறங்கி வந்து அவரது மதீப்பிடுகளை நமது வாழ்விலும் அடுத்தவரின் வாழ்விலும் செயல்வடிவம் கொடுப்போம். அப்போது நாம் எதற்கும் அஞ்சாமல் என்ன அவதூறுகள் வந்தாலும் இயேசுவோடு இணைந்துப் பணிச் செய்வோம் என்பது உறுதி.

சுய ஆய்வு

  1. நான் இயேசுவை என் இதயத்தில் பதிவுச் செய்துள்ளேனா?
  2. இவரது வார்த்தைகள் என் கனவிலும் வாழ்விலும் பிரதிபலிக்கின்றதா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் இவ்வுலக நாட்டங்களைக் கானல் நீர் எனக் கருதும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு