அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 16

இன்றைய நற்செய்தி

யோவான் 6:1-15

இன்றைய புனிதர்

St Benedict Joseph Labre

புனித பெனடிக் லாபர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார்.யோவான் 6:12

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு ஆண்கள் எண்ணிக்கையில் மட்டும் ஐந்தாயிரம் பேர். இங்கே நற்செய்தி ஆசிரியர் பெண்களை, பிள்ளைகளை கணக்கில் கொள்ளவில்லை இருப்பினும் அவர் களையும் சேர்த்து எத்தனை பேர் உண்டார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். எனவே இறைமகனின் மாட்சிமை இங்கு புலப்படுகின்றது. தந்தையின் அருஞ்செயல்கள், தன் மகன் வழியாக நிறைவு பெறவே இம்மாபெரும் புதுமை தந்தை செய்துள்ளார். எனவே அன்பார்ந்தவர்களே இறைமகனின் வல்லசெயல்கள் அனைத்தும் நம் மானிடரின் மாட்சிக்காக என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். நாமும் தமது புறச்சிந்தனைகளை அகற்றி இறைவன் பால் நமது ஐம்புலன்களை ஏறெடுக்கும்போது நாம் அவரில் ஐக்கியமாவோம் என்பதை மறவாதீர்

சுய ஆய்வு

  1. நான் இயேசுவின் மாட்சிமையை உணர்ந்துள்ளேனா?
  2. இல்லையேல் நான் அவரை உணர என் செயல்பாடு என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர் எனக்குள்ளும் உமது வார்த்தைகள் என் நாவிலும் ஒலிக்க - உரைக்க வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு