அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 15

இன்றைய நற்செய்தி

யோவான் 3:31-36

இன்றைய புனிதர்

St. Paternus

புனித பாட்டர்னூஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தந்தை மகன் மேல் அன்புக் கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். யோவான் 3:35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைமகன் மேல் அவரது தந்தை அளவுக் கடந்த அன்பைப் பொழிந்துள்ளார். எனவே தன் மக்களைக் காக்கும் பொருட்டு அவரை அளவிடமுடியாத ஆவியின் வரங்களையும் பொழிந்து நிறைவு செய்துள்ளார். ஆகவே இறைமக்களாகிய நாம் இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்டு அவர் வழியாக நாம் மீட்பு பெறமுடியும் என்பதை உணருவோம். எனவே அவரது அன்பு நம்மில் பிரதிப் பலிக்கின்றது என்ற விசுவாசம் நம்மில் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. என்பதை நமது செயல்பாடுகள் மூலம் அடுத்தவரின் துயர்துடைக்கும் போது நமது அன்பு பரிமளிக்கின்றது. எனவே நாம் கடந்து செல்வோம். இறைபுகழ்ப் பாடி அவரது மதிப்பீடுகளைத் தரணியில் பதிப்போம். அன்று தான் இயேசுவின் தாகம் தீரும்.

சுய ஆய்வு

  1. அன்பு என்பதை நான் என்னவென்று உணர்ந்துள்ளேனா?
  2. அதனை அடுத்தவரின் நலனில் பதிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசு! உமது அன்பைச் சுவைக்கக் கற்றுத் தாரும். அதனை அடுத்தவருக்கும் பகிர்ந்தளிக்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு