அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 14

இன்றைய நற்செய்தி

யோவான் 3:16-21

இன்றைய புனிதர்

St. Tiburtius

புனித திபுர்சியுஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும். யோவான் 3:21

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு உண்மையாக வாழ்பவர்கள் ஒளியைக் கண்டு இருள் விலகி ஒடும். தீய வழியில் வாழ்பவர் இருளேயே மூழ்கி இருப்பார். அவர்கள் வாழ்கின்ற வாழ்க்கை அவர்களைப் பொறுத்தவரைப் பிரகாசத்தைத் தரும். ஏனெனில் இவ்வுலகவே நிலை வாழ்வுத் தரும். வாழ்வை அனுபவிக்கத் தானே பிறந்தோம் என்ற மமதையில் யாரை வேண்டுமாலும் அழித்துத் தான் மட்டும் சுகத்தை அநுபவிக்க அஞ்சுவதில்லை. எனவே உண்மை ஒளியை அனுபவிக்கவும் சுவைக்கவும் முடியாமல் நிலைவாழ்வு என்பதை ருசித்திட முடியாமல் வாழ்கின்றனர். இதனை உணர்வோம்.

சுய ஆய்வு

  1. இறைவன் தரும்உண்மை வாழ்வைச் சுவைக்க என் முயற்சி என்ன?
  2. அதனை அடைய எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

உயிர்த்த அன்பு இயேசுவே! உண்மை ஒளியின் மக்களாக வாழவும், உமது பிரசன்னத்தில் நிலைத்திருக்க வரம் தாரும். .ஆமென்.

அன்பின்மடல் முகப்பு