அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 13

இன்றைய நற்செய்தி

யோவான் 3:7-15

இன்றைய புனிதர்

St Martin I

புனித முதலாம் மார்டின்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அப்போது அவரிடம் நம்பிக்கைக் கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வுப் பெறுவர். யோவான் 3:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் உயிர்த்த ஆண்டவர் மோயீசன் பாலை நிலத்தில் பாம்பு உயர்த்தியது போல் மனுமகனும் உயர்த்தப்பட்டர். மீண்டும் உயிர்த்துச் சாவை வென்றார் என்பதை நம்புகின்ற அனைவரும் நிலைவாழ்வுப் பெறுவர். எனவே இறைமக்களாகிய நாம் உயர்த்த ஆண்டவரில் நம்பிக்கைக் கொண்டு அவரது போதனைகளை அடுத்தவரில் தடம் பதிக்கும்போது நாமும் நிலை வாழ்வுப் பெறுவோம். வாழ்கின்ற இந்த உலகம் நிலையற்றது. பொன்னும் பொருளும் உடன் வருவது இல்லை. நாம் எதையெல்லாம் மண்ணுலகில் விதைக்கின்றோமோ அதையே ஒன்றுக்கு நூறாகப் பலன் பெறுவோம். அதுவே நிலைவாழ்வாகும் என்பனை உணர்ந்தவர்களாய் இறைவனை வேண்டுவோம்.

சுய ஆய்வு

  1. நிலைவாழ்வு என்ன வென்று உணர்ந்துள்ளேனா?
  2. அதனை அமைய எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நிலையில்லா உலகில் நிலை வாழ்வை அடைய எனக்கு வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு