அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 11

இன்றைய நற்செய்தி
இறை இரக்கத்தின் ஞாயிறு

யோவான் 20:19-31

இன்றைய புனிதர்

St Stanislaus

புனித ஸ்தனிஸ்லாஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இதைச் சொன்னப் பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். யோவான் 20:22

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் உயிர்த்த ஆண்டவர் தன் சீடர்களின் அவர்கள் மீதி ஊதித் தூய ஆவியைப் பொழிகின்றார். தூய ஆவியின் பிரசன்னம் அவர்களில் நிறைவுப் பெறும் போது அடுத்தவரின் குற்றங்களை மன்னிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு இயேசு வழங்கினார். எவரது பாவங்கள் மன்னியாது இருப்பீர்களோ அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படமாட்டாது என்று இறைமகன் சொல்கின்றார். நாமும் ஆவியின் கொடைகளைத் திருமுழுக்கு - உறுதிபூசுதல் மற்ற அருளடையாளங்கள் வழியாகவும் பெற்றுக் கொண்டுள்ளோம். அவற்றைத் தீய நாட்டங்களிலிருந்து விடுபட்டு இறையாட்சியினிமித்தம் செயல்படும் போது ஆவியின் பிரசன்னம் நம்மில் தங்கும் என்பதை உணர்வோம்.

சுய ஆய்வு

  1. தூய ஆவியை இனம் காண்கின்றேனா?
  2. அவரது கொடைகளை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளோனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! தூய ஆவியின் கனிகளை என்னில் பொழிந்து வரமருளும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு