அருள்வாக்கு இன்று

ஏப்ரல் -

இன்றைய நற்செய்தி

மாற்கு 16:9-15

இன்றைய புனிதர்

St. Fulbert of Chartres

புனித புல்பெர்ட்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். மாற்கு 16:16

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தாம் உயிர்த்து விட்டதை மகதலா மரியா மற்றும் வேறு இரண்டு சீடர்கள் சொல்லியும் நம்பாமலிருப்பதைக் கண்டு இயேசு மிகுந்த வருத்தமுற்றார். இறுதியாகப் பந்தியில் அமர்ந்திருந்தபோது மீண்டும் அவர்கள் முன்பு தோன்றினார். தம் உயிர்ப்பை நம்பாமலிருந்தவர்களைச் சாடினார். படைப்பிற்கெல்லாம் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைக் கொண்டு திருமுழுக்குப் பெறவோர் மீட்புப் பெறுவர். நம்பிக்கையற்றவர்கள் தண்டனைத் தீர்ப்பிற்குள்ளவர் என்ற சாடுகின்றார். காரணம் நற்செய்தி என்றால் இறைவன் - மனிதனாகப் பிறந்து வளர்ந்த போதனைகள் சாதனைகள் பணிகள் பல புரிந்துப் புதுமைகள் பிணிதீர்த்தல் இவைகள் வழியாக மனிதரின் இன்பதுன்பங்களில் பங்குப் பெற்றதினாலும் அவரை மெசியா என்று ஏற்க மனமில்லாதவர்கள் அவரைக் கொடுரமாகச் சிலுவையில் மரித்த மீண்டும் தான் இறைமகன் என்பதைப் பறைசாற்றவும் தம் உயிர்ப்பை மானிடர் அறிந்து இதனை வருங்காலச் சந்ததியருக்குச் சான்றுப் பகர்தலே நற்செய்தியாகும். உடன் பயணித்த சீடர்களே உணராததைக் கண்டிக்கின்றார்.

சுய ஆய்வு

  1. நற்செய்தியை நம்புகிறேனா?
  2. நற்செய்தியின் பொருட்டு என்ன நேர்ந்தாலும் ஏற்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது சாட்சியாக நான் வாழ வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு