அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 8

இன்றைய நற்செய்தி

லூக்கா 24 35-48

இன்றைய புனிதர்

St Julie Billiart

புனித ஜீலியா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார். லூக்கா 24:45

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் உயிர்த்த இயேசு மறைநூலை அல்லது இறைவார்த்தையைப் புரிந்து கொள்ளும் படியான ஆற்றலை அல்லது மனகண்களைத் திறந்து விடுகிறார். ஆம் சகோதரர்களே நாமும் மறைநூலை அதாவது விவிலியத்தை ஏனோ தானோ வாசிக்க வேண்டும் என்ற நோக்கில் வாசித்தால் அது எதுவும் புரியாது. நாம் தூய ஆவியின் ஒளியில் இறைவார்த்தையை மறுவாசிப்புச் செய்து கிறிஸ்துவின் மதிப்பீடுகளின் படி நாம் வாழும் போது தான் நமது மனக் கண்களும் திறக்கப்படும் என்பதை நாம் மனப்பூர்வமாக உணர்ந்திருத்தல் அவசியம். எனவே இறைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் நாம் இயேசுவின் கனவுகளை நனவாக்க நம்மையே முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்.

சுய ஆய்வு

  1. இயேசுவின் பிரசன்னம் என்னில் உள்ளதா?
  2. தூய ஆவி என்னை வழி நடத்துகின்றாரா என்பதை நான் உணர்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர் என் மனக்கண்களைத் திறந்து உம் பிரசன்னத்தில் நான் வாழ வரமருளும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு