அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 6

இன்றைய நற்செய்தி

யோவான்20:11-18

இன்றைய புனிதர்

St Pierino Morosini

புனித மார்சுலின்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" எனச் சொல்" என்றார். யோவான்20:17

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் உயிர்த்த இயேசுவை மகதலா மரியா கல்லறையில் நின்று தேடுகின்றார். வானதூதர்களிடம் அழுதவாறே என் ஆண்டவரை எங்கே கொண்டு போய் வைத்தீர்கள் என்றதும் இறைமகன் மரியா என்றார். மரியா ”ரபூணி” என்றார். இயேசு அவரிடம் என்னை இப்படிப் பற்றிக் கொண்டிராதே! என் தந்தையும் -உங்கள் தந்தையுமானக் கடவுளிடம் நான் செல்ல வேண்டும் என்றார். பின் என் சீடர்களிடம் போய்ச் சொல் என்றார். அவ்வாறே மகதலா மரியா சீடரிடம் “என் ஆண்டவரைக் கண்டேன்” என்றார். இயேசு கூறியவற்றை அவர்களிடம் சொன்னார்.
ஆம் அன்பாகளே! மரியா ஒரு பாவியாக இருந்து தன் பாவங்களுக்காக மனம் வருந்திக் கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவித் தன் கூந்தலால் துடைத்து மன்னிப்புப் பெற்றவர் என்பதை உணருவோம்.அவருக்கே இயேசுவின் உயிர்ப்பின் முதல் தரிசனம் அமைந்தது என்றால் பாவிகளை மீட்கவே வந்தேன் என்பதைப் பதிவுச் செய்கிறார்.

சுய ஆய்வு

  1. மரியா என்றவரை அறிகிறேனா?
  2. “என் ஆண்டவரைக் கண்டேன்” என்னும் சாட்சிப் பெற எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு உயிர்த்த இயேசுவே! உமது தரிசனம் எனக்குக் கிடைத்திடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு