அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 4

இன்றைய நற்செய்தி
ஆண்டவருடைய உயிர்ப்பின் ஞாயிறு

யோவான் 20: 1-9

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்: நம்பினார். யோவான் 20:8

வார்த்தை வாழ்வாக:

உயிர்ப்புப் பெருவிழாப் புதிய காலத்தின் தோன்றலுக்கு மூலக் கல்லாய் அமைந்தது. இயேசுவின் உயிர்ப்பு ஒரு புது யுகத்திற்கு அச்சாரமாய் அமைந்தது. இயேசுவின் தலைமைச் சீடரான பேதுரு அன்று ஆதித் திருச்சபைக்கு அளித்த மறையுரையே இன்றைய முதல் வாசகமாக அமைந்தது. யூதர்களுக்கு அஞ்சி மறைந்திருந்த சீடர்கள் ஆற்றல் பெற்று வெளிவரக் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருபலமாக இருந்தது. அவர்கள் அழிந்துப் போகும் இவ்வுலகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அழியா வாழ்வுத் தரும் நிறைவாழ்வைப் பெறும் பொருட்டுத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்று சீடர்கள் அன்று அறிவித்தனர்.
புனித பவுலடிகளார் ஊணியல்பைக் கட்டுப்படுத்தி அன்பு - நீதி - நேர்மை - அமைதி - பொறுமை மதிப்பீடுகளை உயிர்த்த இயேசுவின் பலம் பெற்றுச் சமுதாயத்தில் நிலை நாட்ட அழைப்பு விடுக்கின்றார்.புனித பவுலடிகளார் வெற்றுக் கல்லறையிலே மீட்பின் மறைபொருள் பொதிந்துள்ளது. நம் வாழ்வில் வெறுமை - துன்பம் - பொறாமை - சோதனை - வேதனை - ஏக்கம், ஏளனம் போன்றவை கைவிடபடல் - நொறுக்கப்படல் புறக்கணிக்கப்படல் போன்றவை தொடரும் போது இறைமகனை நாம் துணைக் கொண்டு அனைத்தையும் முறியடிப்போம் என்பது திண்ணம்.

சுய ஆய்வு

  1. உயிர்த்த ஆண்டவர் என்னில் கூறும் செய்தி யாது?
  2. அவரது அரசை நான் கட்டி எழுப்ப என் முயற்சி யாது?

இறைவேண்டல்

உயிர்த்த இயேசுவே என் துயரங்களை புதைத்து விட்டு மீண்டும் உயிர்க்க வரம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு