அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 2

இன்றைய நற்செய்தி
ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி

யோவான் 18:1-19:42

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், "நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா? " என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர். யோவான் 18-26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தன் தந்தை தன் மக்களின் துயரைத் துடைத்து அவர்களது அறியாமையை அகற்றி அனைவரும் இறைவனில் ஒன்று என்ற வாக்கை நிலைபடுத்தவே தன் மகனை இவ்வலகிற்கு அனுப்பினார். அப்படி ஒப்படைக்கப்பட்ட மக்களுள் எவரையும் அவரிழக்க விரும்பவில்லை என்பதைத் தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
ஆம் அன்பர்களே! நமக்கும் இறைமகன் சில கடமைகளே, தன் இரு கட்டளைகள் வழியாக ஒப்படைத்துள்ளார். சோதனை வரும் போதும் அதனை எதிர்கொண்டு மனுகுலத்திற்காகப் பணியாற்ற நம்மையே இழக்க நாம் தயாராக இருத்தல் அவசியம்.

சுய ஆய்வு

  1. சிதறி போகும் மனிதர் இடையே என் நிலை என்ன?
  2. அதனை வென்றிட எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

நாம் நமது குற்றங்களை இயேசுவிடம் இன்று வைத்து விட்டு மீண்டும் புத்துயிர் பெற்றுப் புது வாழ்வுப் பெறுவோம். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு