anbinmadal

மார்ச் 19 செவ்வாய்

இன்றைய நற்செய்தி:

லூக்கா 2:41-51

"நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?"

அருள்மொழி:

அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார்.
லூக்கா 2:

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பன்னிரெண்டு வயதில் எருசலேம் தேவாலயம் பாஸ்கா விழாவை முன்னிட்டுத் தன் பெற்றோருடன் சென்றிருந்தார். விழா முடிந்துத் திரும்புகையில் ஒருநாள் பயணத்திற்குப் பிறகு மகனைக் காணாமல் மரியாவும் யோசேப்பும் தேடி மீண்டும் எருசலேம் நோக்கிச் சென்றார்கள். அங்குச் சிறுவன் இயேசு மறைநூல் அறிஞர்கள் நடுவே அமர்ந்து, அங்கு நடந்த விவாதத்தில் சரியான பதிலைச் சொன்னதைக் கண்டு அனைவரும் வியந்தனர். அவ்வேளையில் மரியா மகனே! ஏன் இப்படிச் செய்தீர்? என்றதும், என் தந்தையின் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாமா? என்ற வினாத் தொடுத்ததைக் கண்ட மரியா அனைத்தையும் மனதில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். இறைமகன் இயேசு இளைமை முதலே ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கினார்.

சுயஆய்வு :

  1. இளமைப் பருவ இயேசுவின் செயல்களை அறிகிறேனா?
  2. அவரது புத்தி கூர்மை ஞானம் என்னைத் தொடுகிறதா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம்மைப் போல சிறுபிள்ளைகள் ஞானத்திலம் அறிவிலும் சிறந்து விளங்கிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org