anbinmadal

மார்ச் 18 திங்கள்

இன்றைய நற்செய்தி:

லூக்கா 6:36-38

"மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். "

அருள்மொழி:

"பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
லூக்கா 6:37

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அடுத்தவர்களை மன்னியுங்கள். மன்னிப்புப் பெறுவீர்கள். யாரையும் தீர்ப்பிடாதீர்கள். நாம் இவ்வுலக வாழ்வில் எதைச் செய்கின்றோமோ அதுவே நமக்குப் பல மடங்கு திருப்பிக் கொடுக்கப்படும் என்பதனை நல் ஆசானாக இறைமகன் பதிவு செய்கின்றார். விவிலியம் முழுவதும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதின் சொல்வளமே அதில் முழுமையாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே இறைமகன் மண்ணுலகில் மனித அவதாரம் எடுத்துத் தான் அனைத்து நிலைகளிலும் ஊடுருவிச் சென்று இவ்வுலக வாழ்வு எத்தகையது? மனிதப் பலவீனம் எதையும் சிந்திக்காது என்பதை உணர்ந்த இயேசு, நமக்கு இறையரசின் விழுமியங்களை ருசித்துச் சுவைத்து வாழ வழிக் காட்டுகின்றார். எனவே வாழ்க்கை என்றொரு பயணத்தை இறைவன்பால் செலுத்துவோமாக!

சுயஆய்வு :

  1. மன்னிக்கும் மனபான்மையைக் கொண்டுள்ளேனா?
  2. எம்மில் தீர்ப்பிடாமல் இருக்க என் மனநிலை என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமத போதனைகளை என் வாழ்வின் நங்கூரமாகிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org