anbinmadal

மார்ச் 17 ஞாயிறு

இன்றைய நற்செய்தி:

லூக்கா 9:28-36

"மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நடக்கவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்."

அருள்மொழி:

மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
லூக்கா 9:37

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தோற்றம் மாறினார். தம் சீடர்கள் பேதுரு, யாக்கோபு யோவான் ஆகிய மூவரையும் அழைத்துக் கொண்டு தாபோர் தலைக்குச் சென்றார். அங்கு எவரும் உடுத்தமுடியாத வெண்மை நிறத்தில் இறைமகன் தோன்றினார். அதனைக் கண்டச் சீடர்கள் அச்சத்தில் மூழ்கினர். அங்கே எலியா- மோசே இறைமகனுடன் இணைந்து மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நடக்கவிருந்த இயேசுவின் இறப்பைப் பற்றி அங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் மாட்சியோடு விளங்கிய இயேசுவையும் அவர்களோடு இருப்பதைக் கண்டார். அப்போது மேகம் வந்து நிழலிட்டது. ”இவரே என் அன்பார்ந்த மைந்தர். நான் தேர்ந்துக் கொண்டவர். இவருக்குச் செவிசாயுங்கள்.” அக்குரல் கேட்டபோது இயேசு மட்டும் அங்கிருந்தார்.

சுயஆய்வு :

  1. மாட்சியுடன் விளங்கியவர்களை அறிகிறேனா?
  2. என் அன்பார்ந்த மகன் இவரே என்பவரை அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது மாட்சியில் நான் பங்கு பெறும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org