anbinmadal

மார்ச் 16 சனி

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 5:43-48

"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்"

அருள்மொழி :

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
மத்தேயு 5:48

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பகைவரிடமும் அன்பாயிருங்கள். அவர்கள் உங்களைத் துன்புறுத்தினால் அவர்களுக்காக வேண்டுங்கள். ஏனெனில் நாம் நமக்கு நன்மைச் செய்வோருக்கு நன்மைச் செய்தால், அதற்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? பகைவரிடம் அன்புச் செலுத்தும் போது தான் மறைவாய் காணும் நம் தந்தையும் நமக்கு மிகுந்த கைம்மாறு கொடுப்பார். காரணம் வானகத் தந்தை அனைவர் மீதும் தம் அன்பைப் பொழிகின்றார். ஆனால் அதைப் பெறும் தகுதியுள்ளோர் தான் அதைப் பெற்று மகிழ்கின்றனர். தகுதியற்றோர் விளிம்பில் நிற்கின்றனர். அதை அவர்களும் ருசித்து மகிழ்ந்திட அவர்களுக்காகச் செபிக்கோம் நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நாம் நிறைவுள்ளவராக வாழ வேண்டும் என்பதே இறைமகனின் தாகம் அதற்காகவே மண்ணகம் வந்தார். பாடுகள் பட்டு மரித்து உயிர்த்தார் என்னும் நினைவுகளை மனதில் பதிவு செய்வோம்.

சுயஆய்வு:

  1. என் அன்பு எத்தகையது?
  2. பகைவரையும் அன்பு செய்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் பகைவரையும் அன்புச் செய்து வாழும் பேற்றினை வழங்கிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org