anbinmadal

மார்ச் 15, வெள்ளி்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:20-26

”கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள்”

அருள்மொழி :

கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.
மத்தேயு :26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு சினம் கொள்ளாதீர்கள் என்ற நல் ஆசானாகப் பதிவு செய்கின்றார். அதாவது நமக்கு அடுத்திருப்பவர் அனைவருமே சகோதர சகோதரிகள் என்பதை மனதில் வைத்து, அவர்களிடம் சினம் கொள்ளாமல் அனைவரையும் அன்புடன் அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கைக் கொண்டிருங்கள். அடுத்தவர்களை அறிவிலியே, முட்டாளே! என்ற சொல்ல வேண்டாம். மற்றவர்களிடம் மனத்தாங்கல் இருந்தால், உங்கள் காணிக்கையைக் கொண்டு வருவதற்கு முன் அவர்களிடம் சமாதானம் செய்துவி்ட்டு வந்து காணிக்கையைச் செலுத்துங்கள். இதுவே என் தந்தைக்கு ஏற்றக் காணிக்கை என்பதை உணர்ந்து அனைவரையும் மதித்து நடங்கள். இல்லையேல் கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறமாட்டீர்கள் என்கின்றார்.

சுயஆய்வு:

  1. என்னைச் சுற்றியுள்ள சகோதரர்களை நான் எப்படி நேசிக்கிறேன்?
  2. அல்லது அவர்களைப் புறந்தள்ளுகிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! என் சகோதர சகோதரிகளிடம் அன்பு செய்து வாழ வரம் தர மன்றாடுகின்றேன். ஆமென்.


www.anbinmadal.org