anbinmadal

மார்ச் 14 - வியாழன்

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 7:7-12

"பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."

அருள்மொழி :

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.
மத்தேயு 7-12

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நீங்கள் எதை வேண்டுமென்று விரும்பகிறீர்கயோ அவற்றையே அடுத்தவர்களுக்கும் கொடுங்கள். அப்போது தான் மறைவாயுள்ளவர் காணும் அனைத்தைதயும் பல மடங்க நமக்கு திருப்பித் தருவார் என்பதை இறைவேண்டலின் நிறைவு என்பதை உணர்ந்திடும். பிரதிபலன் எதிர்பாராமல் ஏழை எளியோருக்கு கொடுக்கும்போது தான் மறைவாயுள்ள நம் தந்தையும் நமக்கு மிகுந்த கைம்மாறு வழங்குவார் இறைவேண்டலாகும். கேட்பவர்கள் பெற்று கொள்கின்றார்கள். தட்டுபவர்களுக்கு கதவு திறக்கப்படுகிறது. தேடுவோர் இறைவனைக் கண்டுஉய்த்துணர்வர் என்தே இறைமகனின் வேட்கை என்பதை உணர்ந்தவர்களாய் இறையரசில் இணைவோம்.

சுயஆய்வு :

  1. எனக்கு அடுத்திருப்பவருக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்?
  2. நான் அடுத்தவர் நலனில் அக்கரை கொள்கிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! உமது வார்த்தைகளின்படி அடுத்தவர் நலனில் அக்கரைக் கொண்டு பணிச் செய்யும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org