anbinmadal

மார்ச் 13- புதன்

இன்றைய அருள்வாக்கு

லூக்கா 11:29-32

“இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!”

அருள்மொழி :

தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!
லூக்கா 11-32-

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு யோனாவின் அடையாளத்தை இங்கே பதிவு செய்கின்றார். யோனா நினிவே மக்களுக்கு இறையரசை வெளிபடுத்த தந்தையால் அனுப்பட்டவர். ஆனால் அவர் மனம் சிதறியபோது, அவர் மூன்று நாட்கள் இரவும், பகலும் திமிங்கலத்தின்று மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டார். இவரது சான்றைக் கவனித்த நினிவே மக்கள் சாக்குடை அணிந்த மனம் மாறினார். ஆனால் இங்கு இருப்பவரோ யோனாவைவிட மிகப் பெரியவர். இவரும் இத்தலைமுறையினருக்காகச் சிலுவையில் அறையுண்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்பதே தந்தையின் திருவுளம் என்பதை இங்கே இறைமகனன் பதிவுச் செய்கிறார். எனவே நாமும் இறைவாக்கு உயிருள்ளது. அது பாதளம் வரை ஊடுருவிப் பாயும். கருக்கு போன்ற வாளினும் கூர்மையானது என்பதை உணந்தவர்களாய் இறைவார்த்தையின்படி வாழ்வோம். இறையரசில் இணைவோம்.

சுயஆய்வு :

  1. யோனாவை விட மிக பெரியவரை அறிகிறேனா?
  2. இவரது வார்த்தை என் வாழ்வின் அடிதளம் என்பதை அறிகிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! உமது வாக்கு என் வாழ்வின் அடிதளமாகிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org