மார்ச் 12 - செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 6:7-15

"பிறர் குற்றங்களை மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்"

அருள்மொழி :

மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
மத்தேயு 6:15

வார்த்தை வாழ்வாக

இன்றைய நற்செய்தியில் இயேசு நாம் எவ்வாறு இறைவேண்டல் செய்ய வேண்டும், எப்படி வாழ வேண்டும்? என்று நமக்கு நல் ஆசானாகச் செபிக்கக் கற்றுத் தருகின்றார். விண்ணுலகிலுள்ள தந்தையைப் போற்றவும், புகழவும் அவரது இறையரசு இம்மண்ணகத்தில் தழைத்திடவும், உமது திருவுளம் விண்ணுலகில் எவ்வாறு நிறைவேறுகின்றதோ, அவ்வாறு இந்த மண்ணுலகிலும் நிறைவுப் பெற்றிட வரம் வேண்டிச் செபிக்க நமக்குக் கற்றுத் தருகின்றார். அவ்வாறே எங்கள் அன்றாட ஆன்ம உணவை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு எதிராக யாராவது குற்றம் செய்தால் அதை நாங்கள் மன்னித்தருளும் நல் மனதினை எங்களுக்குத் தாரும் என்றும் தந்தையாகிய இறைவனிடம் நாம் கேட்கும்படி நல்ஆசானாகக் கற்றுத் தருகின்றார். ஆனால் நாமோ நமது குற்றங்களைப் பிறர் மன்னித்தாலும், நாம் அடுத்தவரது குற்றங்களை மன்னிக்க மறந்து விடுகின்றோம். இந்நிலை மாறித் திறந்த மனிதினராய் எதிரிகளையும் மன்னிக்கும் வரம் வேண்டுவோம்.

சுயஆய்வு:

  1. விண்ணக தந்தையை அறிந்துள்ளேனா?
  2. என் குற்றங்களை உய்த்துணர்கின்றேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! பிறர் குற்றங்களை மன்னிக்கும் நல்மனதினை வழங்கிடும் மனம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org