மார்ச், 11 - திங்கள்

இன்றைய அருள்வாக்கு

மத்தேயு 25:31-46

"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்"

அருள்மொழி :

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்
மத்தேயு 25:46

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மக்கள் இனத்தார் அனைவருக்கும் இறுதி நாளில் பொதுத் தீர்வையிடப்படுவார்கள் என்பதன் கருப்பொருளை வெகுவாய் வெளிபடுத்துகின்றார். நாம் எப்படி வாழ வேண்டும் என்று மறைநூல் முழுவதும் நற்செய்தியாக, அறச்செயல்கள் வாயிலாக நாம் வாழ வேண்டும் என்பதைப் புதுமைகள், பிணிதீர்த்தல் - தர்மம் செய்தல் அனைத்தையும் பலவாறு விளக்கியுள்ள இறைமகன் இறுதி நாளில் நாம் வாழ்ந்த இவ்வுல வாழ்வின் அடிப்படையில் நமக்குக் கிடைக்கும் மறுவுலக நிலை வாழ்வின் மேன்மையை விளக்குகின்றார். சின்னஞ்சிறியோருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் நான் பெற்றுக் கொண்டது அடுத்தவர்களின் ஏழையின் சிரிப்பில் என்னையே காண்பீர்கள் என்ற வரிகளாக நமக்கு வலப்பக்கம் - இடபக்கம் அமரும் நிலையை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார். அறிவோம்.

சுயஆய்வு :

  1. நான் எப்படி வாழவேண்டும் என்பதை அறிகிறேனா?
  2. இடப்பக்கமா? வலப்பக்கமா? எதை தேர்ந்துக் கொள்கிறேன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது தீர்ப்பை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org