மார்ச், 10 - ஞாயிறு

இன்றைய நற்செய்தி:

லூக்கா 4:1-13

" உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் "

அருள்மொழி :

இயேசு அதனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே" என்றார்.
லூக்கா 5:10

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு யோர்தான் நதிக்கரையிலிருந்து பாலைநிலத்திற்குத் தூயஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நாற்பது நாள் நோன்பு இருந்தார். பின்ப அலகையினால் சோதிக்கப்பட்டார். 40 நாள்களுக்குப் பிறகு பசியுற்றார். அப்போது அலகை அவரைச் சோதிக்கும் நோக்குடன் கல்லை அப்பமாக மாற்றும்படி கூறியது. இறைமகன் மனிதர் அப்பத்தினால் மட்டும் உயிர் வாழ்வதில்லை.என்றார். இரண்டாம் முறை உலகத்தின் அனைத்து அதிகாரங்களையும் உனக்கு வழங்குவேன். ஏனேனில் அவை அனைத்தும் என் அதிகாரத்திற்குட்பட்டுள்ளது என்றது. "உம் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணிச் செய்வாயாக" என்றார். மீண்டும் முன்றாவத முறையாக உயர்ந்த மலைக்கு அழைத்துச் சென்று இங்கேயிருந்து கீழே குதியும். உம் தூதர்கள் வந்து உம்மைக் காத்துக் கொள்வார் என்றதும் இறைமகன் "உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கதே என்றார். அனைத்தும் முடிந்தபின்புக் காலம் வரும் வரை காத்து நின்றது.

சுயஆய்வு :

  1. இறைமகனுக்கே சாத்தான் சோதனை உண்டு அறிகிறேனா?
  2. இச்சோதனைகளை வெல்ல என் கூற்று யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! இவ்வுலக ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல் உம் சித்தம்படி வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org