மார்ச் 9 - சனி

இன்றைய நற்செய்தி:
மாற்கு 5:27-32

"நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்"

அருள்மொழி:

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார்.
மாற்கு 6:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு சுங்க சாவடியில் அமர்ந்திருந்த லேவியை அழைக்கின்றார். "என்னைப் பின் பற்றி வா". உடனே லேவி அனைத்தையம் துறந்த இயேசுவை பின் தொடர்ந்தார். அவரது வீட்டில் இறைமகன் வருந்துண்ணும் போது பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்கள் ஏன் பாவிகளோடும் வரிதண்பவரோடும் விருந்துண்கிறீர்? என்று இயேசுவிடம் கேட்டார்கள். அதற்கு இறைமகன் " நோயற்றவருக்கு அல்ல, மருத்துவர் நோயுற்றவருக்கே தேவை!" என்றவர் தொடர்ந்து "நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே தேடிவந்தேன்" என்கிறார். அன்றும் இன்றும் அனேகர் சாதியின் பெயராலும்,சமயத்தின் பெயராலும் ஒடுக்கப்பட்டு பிளவுபட்டு நின்ற சூழலில் தான் இறைமகன் மனுவுருவானார். அவரது வருகையே எல்லாரும் எல்லாம் பெற்று இன்புற்று இருக்க வேண்டும் என்பது தந்தையின் திருவுளம். எனவே தான் "பாவிகளையே நாடி வந்தேன்" என்கிறார்.

சுயஆய்வு:

  1. நான் வாழும் இடத்தில் எப்படிபட்ட சூழலை காண்கிகிறேன்?
  2. சமத்துவம் காண எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே அனைவரும் ஒருமித்து வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org