மார்ச், 8 - வெள்ளி

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 9: 14-16

"மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?"

அருள்மொழி :

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
மத்தேயு 9:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் யோவானின் சீடர்கள் வந்து நாங்களும், பரிசேயரும் நோன்பு இருக்கும் போது உமது சீடர்கள் மட்டும் ஏன் நோன்பு இருக்குவில்லை? என்று கேட்டார்கள். இதற்கு இறைமகன் மணமகனின் உடனிருப்பை இங்கே பதிவு செய்கின்றார். அவரே மணமகன்! உடனிருக்கின்றார். இவர்களை விட்டுப் பிரியும் காலம் வரும் அப்போது அம்மணமகனுக்காக மானிடர் அனைவரும் நோன்பு இருப்பார்கள். இறைமகன் பாடுகள் பட்டுச் சிலுவையில் அறையுண்டு மரித்துஅடக்கம் செய்யபடுவார். அப்போது அனைவரும் மணமகனுக்காக நோன்பு இருப்பார்கள். அக்காலம் தான் நாம் தவக்காலமாக அனுசரிக்கின்றோம் என்பதை மனதில் பதிவு செய்து இறைமகன் விட்டுச் சென்ற இறையரசு பணிகளை வாஞ்சையோடு செய்து இறைஆட்சியில் இணைந்திடுவோம்.

சுயஆய்வு :

  1. மணமகனை நான் அறிகிறேனா?
  2. மணமகனின் உடனிருப்பை உணர்ந்திட என் முயற்சி யாது

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது இறையரசைக் கட்டி எழுப்பும் தெய்விக ஞானத்தை வழங்கும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org